நாளை நிவர் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்க உள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை,அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் . நிவர் புயல் எதிரொலி : நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிக்கப்படும் . புயல் கரையை கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே 25.11.2020 அரசு விடுமுறை விடப்படுகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தப்படுகிறது.
மக்களுக்காக அரசு இருக்கிறது. எதிர்கட்சிகள் என்னவேண்டுமானாலும் பேசுவார்கள். நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிக்கப்படுவது குறித்து அரசு முடிவு செய்யும். புயல் கரையை கடக்கும்போது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்எனத் தெரிவித்தார். மழை பெய்வதை பொறுத்துதான் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.