நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இருந்துகொண்டே ஆசிரியர்கள் இணைய வழியில் வகுப்பு மற்றும் தேர்வுகளை நடத்தியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நிவர் புயல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததைத் தொடர்ந்து, இன்று தமிழகத்தில் பொது விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு. அரசு, தனியார் அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்றும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற இருந்த ஆன்லைன் வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகத் தனியார் பள்ளிகள் அறிவித்தன.
ஆனால், மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்றும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தின. தொடக்கப் பள்ளிகளில் தற்போது இரண்டாம் இடைப்பருவத் தேர்வுகள் நடந்து வருகின்றன. அந்தத் தேர்வு ரத்து செய்யாமல் நடத்தப்பட்டது. விடுமுறை என்று அறிவிக்கப்படும் தேர்வுகளை நடத்தியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மதுரை யா.கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 4 ஆம் வகுப்பு மாணவன் அஸ்வத் கூறுகையில், "எங்க பள்ளிக்கூடத்துல, அநியாயத்துக்குப் பாடம் சொல்லிக் கொடுக்குறாங்க சார். எப்படியாவது இந்த வருடம் முழு கல்விக் கட்டணத்தையும் வசூலிச்சிடணும்னு, எங்களை யூனிஃபார்ம் போட்டு ஆன்லைன் கிளாஸ் கவனிக்கச் சொன்னாங்க.
இப்ப அரசாங்கமே சொல்லியும் லீவு விடாமப் பரீட்சை வைக்கறாங்க. லீவு இல்லியா மிஸ்னு கேட்டா, மதுரைக்கும் புயலுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கிறாங்க. மழை நேரத்துல போன் பயன்படுத்தினா ஆபத்து இல்லியா?" என்றார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.