வளிமண்டலம் மற்றும் கடலின் அமைப்பு:
==> தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய நிலநடுக்கோட்டு இந்தியப்பெருங்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் பிறகு புயலாக தமிழக கடற்கரை நோக்கி வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்து சிறப்பு அறிக்கை இரவு 7:30 மணிக்கு வெளியிடப்படும். அதற்கு முன் புயல்கள் உருவாகும் நிலைகளை பார்க்கலாம்.
புயல் உருவாகுவது எப்படி?
1. காற்று சுழற்சி
==> வளிமண்டல மேலடுக்கு ஏற்படும் காற்று சுழற்சி.
2. காற்றழுத்த தாழ்வு நிலை
==> ஒர் மையப்பகுதி (வெற்றிடத்தை) நோக்கி காற்று சுழலாமல் பரந்த அளவில் வளிமண்டலத்தில் அழுத்தம் குறைந்து காணப்படுவது, காற்றழுத்த தாழ்வு நிலை எனப்படும். இயல்பாக காற்றழுத்த தாழ்வு நிலை தென்சீனக்கடலிருந்து சீரான கீழைக்காற்று வருகை தரும் போது ஏற்படும்.
3. காற்றழுத்த தாழ்வு பகுதி
==> ஒர் வெற்றிடத்தை மையமாக வைத்து காற்று குவிதல் ஏற்படுவது காற்றழுத்த தாழ்வு பகுதி.
காற்றழுத்த தாழ்வு பகுதியின் வேகம் மணிக்கு 25கிமீ வரை இருக்கும்.
4. தீவிர காற்றழுத்ததாழ்வு பகுதி
==> தாழ்வு பகுதியின் மையத்தை நோக்கு குவியும் காற்று மணிக்கு 31.4 கிமீ வேகத்தை தொடும் போது தீவிரத்தாழ்வு பகுதி எனப்படும்.
5. காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
==> எப்போது மையத்தை நோக்கி குவியும் காற்றின் வேகம் மணிக்கு 32 கிமீ முதல் 50 கிமீ வரை தொடுகிறதோ, அப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என அழைக்கப்படும்.
6. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
==> மையத்தை நோக்கி குவியும் காற்றின் வேகம் மணிக்கு 51 கிமீ முதல் 62 கிமீ வரை தொடும் போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் எனப்படும்.
7. புயல் :
==> மையத்தை நோக்கி குவியும் காற்றின் வேகம் மணிக்கு 63 கிமீ முதல் 88 கிமீ வரை செல்லும் போது அந்த சலனம் புயல் என்ற அழைக்கப்பட்டு பெயரிடப்படுகிறது.
8. தீவிரப்புயல்
==> மையத்தை நோக்கி குவியும் காற்றின் வேகம் மணிக்கு 89 கிமீ முதல் 117 கிமீ வரை செல்லும் போது தீவிரப்புயல் என்று அழைக்கப்படும்.
==> மேலும் புயலின் மையப்பகுதிக்கு எப்போது 100 கிமீ மேல் காற்று வீசுகிறதோ, அப்போது தான் புயலுக்கு கண் பகுதி உருவாகும்.
9. மிக தீவிர புயல்
==> மையத்தை நோக்கி குவியும் காற்றின் வேகம் மணிக்கு 118 கிமீ முதல் 165 கிமீ வரை செல்லும் போது மிக தீவிர புயல் எனப்படுகிறது.
10. மிக அதி தீவிர புயல்.
==> மையத்தை நோக்கி குவியும் காற்றின் வேகம் மணிக்கு 166 கிமீ முதல் 220 கிமீ வரை செல்லும் போது மிக அதி தீவிர புயல் என பெயரிடப்படும்.
11. சூப்பர் புயல்
==> புயலின் மையத்தை நோக்கி மணிக்கு 221 கிமீ வேகக்தில் காற்று குவிந்தாலோ, அல்லது அதற்கு மேல் குவிந்தாலோ சூப்பர் புயல் என வரையறுக்கப்படும்.
==> மேற்கண்ட அமைப்பில் தான் புயல் உருவாகிறது.
இவண்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.