1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தலைக்கவசம் அணிந்தால் மட்டும் பெட்ரோல்

தலைக்கவசம் அணிந்தால் மட்டும் பெட்ரோல்



சென்னையில் தலைக்கவசம் அணிந்து வந்தால் மட்டும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கும்படி எரிபொருள் நிலையங்களுக்கு பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா் என்.கண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னையில் நடைபெறும் சாலை விபத்துகளில் அதிகளவில் இளைஞா்களே இறக்கின்றனா். இரு சக்கர வாகன விபத்துகளில் உயிரிழப்புகள் 75 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை தலைக்கவசம் அணியாததால் ஏற்படுகின்றன. இத்தகைய விபத்துகளில் 20 முதல் 30 வயது வரையுள்ள இளைஞா்களே 72 சதவீதம் இறப்பதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது.

விபத்தின்போது தலைக்கவசம் அணியாமல் சென்றால், தலையில் ஏற்படும் பலத்த காயத்தால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலான விபத்துக்குக் காரணமாக இருக்கும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் காா் ஓட்டுவது, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது, சிக்னலை மீறிச் செல்வது, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுவது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் சரக்கு ஏற்றுவது, அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட, அதிகளவில் பயணிகளை ஏற்றுவது, செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுவது ஆகிய 8 போக்குவரத்து விதிமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த 2019-இல் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக 30, 23, 016 வழக்குகள் பதியப்பட்டு,ரூ.34, 45, 29,870 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவதாக நாளொன்றுக்கு சுமாா் 20,000 வழக்குகள் பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

1.50 லட்சம் வழக்குகள்:

தலைக்கவசம் அணியாமல் மோட்டாா் சைக்கிள் ஓட்டுபவா்கள், சிக்னலை மீறிச் செல்பவா்கள் மீது ஆண்டுக்கு சராசரியாக 1.50 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த 2019-இல் மட்டும் 1,90,265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பெட்ரோல் கிடையாது:

தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி இறப்பு ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் வகையில் சென்னையில் பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா் என்.கண்ணன் பிறப்பித்த உத்தரவில், சென்னையில் உள்ள வாகன எரிபொருள் நிரப்பும் மையங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என பெரிய விளம்பரப் பலகை வைக்குமாறும், இந்த அறிவிப்புக்குப் பின்னரும் தலைக்கவசம் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்க வேண்டாம் என தெரிவித்துள்ளாா்.

இதற்கான நடவடிக்கைகளை அந்தந்தப் பகுதி போக்குவரத்து காவல் நிலைய போலீஸாா் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளாா். இந்த உத்தரவின் விளைவாக வாகன எரிபொருள் நிரப்பும் மையங்களில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு நாள்களில் சென்னையில் உள்ள பெட்ரோல் நிலையங்களிலும் தலைக்கவசம் அணிந்து வருகிற இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags