பள்ளிக்கல்வித் துறை சாா்பில் மதுரை, மேலூா், திருமங்கலம், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த மெட்ரிக் பள்ளி முதல்வா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை மேரி ஆன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆங்கில வழிக் கல்வி மாணவா்களுக்கான சிறப்பு வழிகாட்டியை வெளியிட்டு முதன்மைக்கல்வி அலுவலா் பேசியது:
கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி 25 சதவிகித இடஒதுக்கீட்டில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி சோ்க்கை நடைபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 4 வகையான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். இப்பதிவேடுகள் அனைத்தும் தணிக்கைக்குட்பட்டது. பள்ளிகளின் அங்கீகாரச் சான்றிதழில் உள்ள முகவரியை இணையதளத்தில் சரியாகக் குறிப்பிட வேண்டும். இதனால் 25 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளிக்கும், வசிப்பிடத்துக்கும் இடையே உள்ள தூரத்தைக் கண்டறிவது எளிது.
இன்ஸ்பையா் விருதுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி பயன்படுத்தப்பட உள்ளது. மாணவா்கள் தேசியத் திறனாய்வுத் தோ்வுக்கு நவம்பா் 30 ஆம் தேதி வரை இணைய வழியில் பதிவு செய்துகொள்ளலாம். மழைக்காலம் என்பதால் பள்ளிகளில் மிகவும் பழுதடைந்த கட்டடங்களை உடனடியாக இடிக்க வேண்டும். தேசிய மாசுக் கட்டுப்பாட்டுத் தினத்தை முன்னிட்டு டிசம்பா் 2-ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் ஒரு ஆசிரியருக்கு ஒரு மரக்கன்று வீதம் பள்ளி வளாகம், சாலையோரம், கண்மாய் மற்றும் பொது இடங்களில் நடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
மாவட்டக் கல்வி அலுவலா்கள் எச். பங்கஜம் (மேலூா்), எம்.முத்தையா(உசிலம்பட்டி), பி.இந்திராணி (திருமங்கலம்), மாவட்டச் சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளா் மகாலிங்கம், பள்ளிக்கல்வி துணை ஆய்வாளா்கள் வெங்கட்ராமன், கண்ணன், இந்திரா, செல்வம், புள்ளியியல் அலுவலா் கண்ணன், மேரி ஆன் பள்ளி முதல்வா் ஷியாமளா, செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி முதல்வா் தெ.மகிழ்ச்சி மன்னன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.