🍃Indian Gooseberry ஒரு அற்புதம்: ஏன்?
இதை ஆங்கிலத்தில் indian goosberry என வெளிநாட்டினர் அழைக்கின்றனர். அத்தனை மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.
🍃முழு நெல்லிக்காய் இந்தியாவிற்கு கிடைத்த வரம் எனலாம். இதை ஆங்கிலத்தில் indian gooseberry என வெளிநாட்டினர் அழைக்கின்றனர். அத்தனை மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. அதன் மகத்துவ பலன்களைப் பற்றி தெரிந்து கொண்டால் தினமும் ஒன்று சாப்பிட நினைப்பீர்கள்.
🍃ஆரஞ்சு, போன்ற சிட்ரஸ் பழங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு வைட்டமின் C அரை நெல்லிக்காயில் உள்ளது. எனவே இதை வெறுமனே சாப்பிட்டாலும் சரி அல்லது நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து சுவைக்கு தேனும் சேர்த்துக் கொண்டால் சளி, தொண்டைக் கட்டுதல் போன்ற பிரச்னைகள் வராது.
🍃நோய் எதிர்ப்புச் சக்தி : உடலில் நோய்க் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலை பெரிய நெல்லிக்காய் அளிக்கிறது. வேகமாகப் பரவும் கிருமிகள், நோய்த் தொற்றுகளையும் எதிர்கொள்ளும் ஆற்றலையும் அளிக்கிறது. எனவே முழு நெல்லிக்காயை ஜூஸ் போட்டுக் குடிக்கலாம் அல்லது உலர்ந்த அரை நெல்லிக்காயை அவ்வப்போது சாப்பிடலாம்.
🍃ஜீரண சக்தி : உணவு செரிமாணப் பாதையை சீராக்கி ஜீரண சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் ஜீரண கோளாறு தொடர்பான மலச்சிக்கல், வயிறு எரிச்சல், வாந்தி , குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கும் எளிய சிறந்த தீர்வு அரை நெல்லிக்காய். ஒருவேளை ஜீரணக் கோளாறு ஏற்பட்டால் உடனே வெதுவெதுப்பான நீரில் அரை நெல்லிக்காய் பொடியைக் கலந்து ஒரு கிளாஸ் குடியுங்கள். உடனே பலனை உணர்வீர்கள். இது பசியைத் தூண்டுவதிலும் சளைத்ததல்ல.
🍃நீரிழிவு நோய்க்கும் நல்லது : இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக பராமரித்து கவனித்துக் கொள்ள முழு நெல்லிக்காய் மகத்தானது. எனவே தினசரி உணவோடு அரை நெல்லிக்காயையும் உட்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
🍃தலைமுடி வளர்ச்சிக்கு நல்லது : தலைமுடி பிரச்னைகளுக்கான ஹேர்கேர் பொருட்களிலும் அரை நெல்லிக்காயும் முக்கிய பொருளாக இருக்கும். பொடுகு, தலை முடி உறுதி, முடி வளர்ச்சி, முடியை சேதமின்றி பாதுகாத்தல் என தலைமுடிப் பிரச்னைகளுக்கான அனைத்து தீர்வுகளும் நெல்லிக்காயில் உண்டு. ஜூஸ் போட்டு தினமும் காலை குடித்து வந்தாலும் முடி கருகருவென வளரும்.
🍃பித்தத்திற்கு தீர்வு : உடல் உஷ்ணம் காரணமாக பித்தம் அதிகமாகும். இதனால் உணவை உடல் ஏற்றுக் கொள்ளாது. தீராத தலைவலியும் உண்டாகும்.
🍃இதற்கு முழு நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் அருந்தலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.