1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கணினியைப் பயன்படுத்தி Whatsapp மூலம் பெறப்பட்ட மாணவர்களின் விடைத்தாளை மதிப்பீடும் செய்யும் முறை

கணினியைப் பயன்படுத்தி Whatsapp மூலம் பெறப்பட்ட மாணவர்களின் விடைத்தாளை மதிப்பீடும் செய்யும் முறை



கணினியைப் பயன்படுத்தி Whatsapp மூலம் பெறப்பட்ட மாணவர்களின் விடைத்தாளை மதிப்பீடும் செய்யும் முறை
தற்போது அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. 



மாணவர்களிடம் Whatsapp மூலம் பெறப்பட்ட விடைத்தாள்களை Mobile App: சுளை பயன்படுத்தி திருத்துவதில் சிரமம் உள்ளது. எனக் கருதும் ஆசிரியர்கள் (Screen size சிறிதாக இருப்பதால்) தங்களது மடிக்கணிளியைப் பயன்படுத்தி விடைத்தாட்களை திருத்தம் செய்வதற்கும் வழிவகை உள்ளது 


 1. முதலில் மானாவர்களிடம் Whatsapp மூலம் பெறப்பட்ட விடைத்தாள்களை தங்களது கணினியில் பதிவிறக்கம் (Download) செய்வதற்கு internet browser Microsoft Edge ஐ open செய்து கொண்டு address bar ல் web.whatsapp.com என தட்டச்சு செய்தால் கீழ்க்கண்டவாறு திரையில் தோன்றும்.

 
இப்போது தங்களது Mobie ல் உள்ள Whatsapp ஐ Open செய்து, Menu Settings →WhatsApp Web என்றத் தேர்வை கிளிக் செய்தால், LINK A DEVICE என்றத்தேர்வு மொபைல் திரையில் காட்டப்படும். UNK A DEVICE என்றத்தேர்வை கிளிக் செய்தால் Scan QR Code என்றத்தகவல் திரையில் காட்டப்படும்.
இதனைப் பயன்படுத்தி, தங்களது கணினியில் காட்டப்பட்டுள்ள QR Codeனை Scanசெய்தால், மொபைலிலுள்ள WhatsApp தகவல்கள் அனைத்தும் கணினியில் காட்சியளிக்க ஆரம்பிக்கும். 


 2. இப்போது மாணவர்கள் குழுமத்திலுள்ள pdf விடைத்தாட்களை தங்களது கணினியில் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள வேண்டும்.

 
3. கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விடைத்தாட்கள் Downloads என்ற Folder ல் காட்டப்படும். இவ்விடைத்தாளின் மீது வலது கிளிக் செய்து Open with என்ற தேர்வில், Microft Edge ல் Open செய்து கொள்ள வேண்டும்.

 
4. இப்போது Microsoft Edge ல் உள்ள Draw Tool ஐ கிளிக் செய்து, அதில் காட்டப்படும் வண்ணங்களில், சிகப்பு நிறத்தினை தேர்ந்தெடுத்து கொண்டு விடைத்தாளை மதிப்பீடு செய்யத் தொடங்கலாம். 


 5. விடைத்தாளை மதிப்பீடு செய்யும் போது ஏதேனும் தவறான மதிப்பெண்ணுக்கு பதில், வேறு மதிப்பெண்ணை கொடுக்க அதில் உள்ள Eraser Tool ஐ கிளிக் செய்து அழித்து விட்டு, மீண்டும் புதிய மதிப்பெண்ணை கொடுக்கலாம்.
 
6. மாணவர்களிடம் விடைத்தாள்களை பெறுவதற்கு, மற்றொரு மாற்று வழியாக தனியே இதற்கென ஒரு மின்னஞ்சல் (இமெயில்) முகவரியினை உருவாக்கி, அந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பச் சொல்லி பெற்றுக் கொள்ளலாம்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags