1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ஜே.இ.இ., தேர்வுகள் ஜூலை 20ல் துவக்கம்

ஜே.இ.இ., தேர்வுகள் ஜூலை 20ல் துவக்கம்


''ஜே.இ.இ., பிரதான நுழைவுத் தேர்வுகள், ஜூலை 20 - 25 மற்றும் ஜூலை 27 - ஆக., 2ம் தேதி வரையிலும் நடத்தப்படும்,'' என, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அறிவித்துள்ளார்.

ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக, ஜே.இ.இ., பிரதான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த தேர்வுகளை இந்த ஆண்டு முதல், பிப்., மார்ச், ஏப்., மே ஆகிய மாதங்களில் நடத்த மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்தது. இதன்படி, பிப்., மற்றும் மார்ச்சில் ஜே.இ.இ., மெயின் தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. ஏப்., மே மாதங்களில் நடக்க இருந்த தேர்வுகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டன.


latest tamil news




தற்போது தொற்று பரவல் குறைந்த நிலையில், மீதமுள்ள தேர்வுகளை நடத்துவது பற்றி, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் கூறியதாவது:

மூன்றாவது ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு வரும், 20 - 25ம் தேதி வரை நடத்தப்படும். நான்காவது தேர்வு, வரும் 27 - ஆக., 2ம் தேதி வரை நடத்தப்படும்.தேர்வு மையங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படும். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு முக கவசம் உள்ளிட்ட தடுப்பு சாதனங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த இரண்டு தேர்வுகளுக்கான முடிவுகளும் ஆகஸ்டில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags