உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவிலும் புகுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு (2020) மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அனைத்தும் மூடப்பட்டன.
இதற்கிடையில் புதுவையில் கொரோனா பரவல் 2-வது அலையில், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அரசின் அதிரடி நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது.
இதையடுத்து மே மாதம் 24-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது உயிரிழப்பு, பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. எனவே ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரியில் 9 முதல் 12-ம் வகுப்பு வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதைபோல புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளும் வரும் 16-ம் தேதி முதல் திறக்கப்படும் எனவும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.