செப்.12-ல் 'நீட்' தேர்வு: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு
செப். 12-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத, லட்சக்கணக்கான மாணவர்கள் நாடு முழுதும் காத்திருக்கின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி குறித்து, மத்திய கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது,
நாடு முழுவதும், மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு வரும் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிமுறைகளை பின்பற்றும் விதமாக தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155 லிருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் முகக்கவசம் வழங்கப்படும். தேர்வு முகமை இணையதளத்தில் நாளை மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழக நல்வாழ்வுதுறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில்,நீட் தேர்வு ஆய்வுக்குழுவுக்கு எதிராக பாஜக., வழக்கு தொடர்ந்து உள்ளது. அந்த வழக்கு நாளை(ஜூலை13) கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசு,மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கி வருகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்பதே திமுகவின் நிலைப்பாடு. மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராவதில் தவறு இல்லை. இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.,
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.