கொரோனா காலத்தில், நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த விரும்பினால், அதற்கு ஏற்ற காய் பரங்கிக்காய் ஆகும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும், பரங்கிக்காய் வப்பிரசாதமாக உள்ளது.
உடல் ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளைத் தருகிறது. பூசணிக்காய் சாப்பிடுவது மழைக்காலத்திலும் குளிர் மற்றும் இருமலில் பெரும் நிவாரணம் கிடைக்கிறது. பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ, கரோட்டின் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், விரைவாக குணமடையவும் உதவுகின்றன.
உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் பரங்கிக்காயை பற்றி குறிப்பிடுகையில், பரங்கிக்காயில் காணப்படும் வைட்டமின்கள் பி மற்றும் பி 6, குறிப்பாக உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன என்கிறார்.
டாக்டர் ரஞ்சனா சிங் மேலும் கூறுகையில், , பூசணிக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரும்பு ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து என்பதை அனைவரும் அறிவோம். இரும்புச்சத்து குறைவாக இருப்பதால் இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இதனால், உடல்சோர்வு, தலைச்சுற்றல், தோல் மற்றும் நகங்கள் vஎளிறி போதல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அத்தகைய சூழ்நிலையில், பரங்கிக்காய் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்கிறது.
பரங்கிக்காயின் பிற நன்மைகள்
பரங்கிக்காயில் வைட்டமின் ஏ ஏராளமாகக் காணப்படுகிறது, இது கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பரங்கிக்காயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை உங்கள் கண்களை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
மேலும், பரங்கிக்காயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் இரண்டிலும் நிறைந்துள்ளன. அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் சக்திவாய்ந்த கலவையால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பரங்கிக்காயில் காணப்படும் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உதவும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.