புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து இன்று (03.08.2021) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுத்த காரணத்தால் அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் உடல் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 1 வருடங்களுக்கும் மேலாக பாடங்கள் வகுப்புகள் மூலம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மாநிலங்களை தொடர்ந்து, யூனியன் பிரதேசங்களிலும் மக்களுக்கு தடுப்பூசிகள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் தொற்று பாதிப்புகள் குறைந்த வண்ணம் உள்ளது.
அதன்படி ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழ் உள்ளது என்று புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை இன்று ஆலோசனை நடைபெற்று உள்ளடகக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியானதையடுத்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பள்ளிகள் திறப்பு முடிவு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பள்ளிகளை திறப்பதற்கு அனைவரின் ஆதரவும் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரைந்த பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும். பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்கலாம் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.