1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு 20% இடஒதுக்கீடு: தேர்வாளர்களின் விவரங்களை அளிக்க உத்தரவு

தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு 20% இடஒதுக்கீடு: தேர்வாளர்களின் விவரங்களை அளிக்க உத்தரவு


அரசு வேலைவாய்ப்பில் தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு 20% இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக TNPSC, தேர்வாளர்களின் விவரங்களை அளிக்கக் கோரியுள்ளது.


 
தமிழ்நாட்டில் தமிழ்வழியில் 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கடந்த 20ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் தமிழ் வழியில் பயின்றவர்களின் விவரங்களை அறிய, தேர்வாளர்களின் விவரங்களை அளிக்குமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.    




 இதன்படி, குரூப் 1 முதல்நிலைத் தேர்வை எழுதியவர்கள் தாங்கள் 1-ம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி படித்ததற்கான சான்று, பிளஸ் 1, பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்ததற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வரும் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 16ம் தேதி வரை தேர்வாளர்கள் தங்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். ஒரு வேளை, தமிழ்வழிக் கல்வி பயின்றதாகக் குறிப்பிட்டு தேர்வு எழுதியவர்கள் அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்யாவிட்டால் அவர்கள் வேலை வாய்ப்பில் உரிமை கோர முடியாது
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags