2020- 21-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கையில்,
2020-2021-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2020 டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (என்டிஎஸ்இ) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் 21.11.2020 முதல் 30.11.2020 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.11 .2020. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது.
பொதுவான அறிவுரைகள்:
தேர்வர்கள் தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தங்கள் பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும்.
போதிய சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
மேலும் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.