தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி, மென்பொருள் பிழைகளைத்(bug) தவிர்க்கவும், பாதுகாப்பு கருதியும் க்ரோம் செயலியை புதுப்பிக்க(update) வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
க்ரோம் செயலியில் மென்பொருள் பிழை(zero day bug) ஏற்பட்டுள்ளதால் அதில் உள்ள தகவல்களை ஹேக்கர்ஸ் திருடும் வாய்ப்புள்ளது. எனவே, தரவுகளின் பாதுகாப்பு கருதி அதற்கான புதுப்பிக்கும் வசதியை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்த பிழையை சரிசெய்ய பிளே ஸ்டோரில் சென்று ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும்.
கடந்த இரு வாரங்களில் மட்டும் மூன்று முறை க்ரோம் செயலியில் இதுபோன்று பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதில் முதல் இரண்டு பிழைகள் கணினியில் க்ரோம் பயன்பாட்டாளர்களுகானது. தற்போது மூன்றாவதாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு க்ரோம் செயலியில் பிழை ஏற்பட்டுள்ளது.
இவை அனைத்தும் ஒரே ஹேக்கிங் குழுவால் ஏற்படுத்தப்பட்டவையா என்பது குறித்து நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.