Home »
Health
» உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கும் செவ்வாழை !!
உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கும் செவ்வாழை !!
செவ்வாழைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவரின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகும், தொற்றுநோய்கள் நெருங்காது.
செவ்வாழை பழத்தில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பழத்தில் அதிகளவு நார்சத்து உள்ளதால் மலசிக்கல் வராமல் தடுப்பதுடன், செரிமான கோளாறுகளையும் போக்குகிறது.
செவ்வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் A சத்து பார்வையை தெளிவடையச் செய்யும். கண் பிரச்சனைகளை அகற்றிவிடும். வயதானவர்களுக்கு ஏற்படும் கண்பார்வை குறைபாட்டைச் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் சரிசெய்யலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இந்த பழத்தை சாப்பிடலாம். இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கிறது. இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களையும் தடுக்கிறது.
இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் மூட்டு வலிகளை குறைப்பதுடன் முடி உதிர்வையும் குறைகிறது. இரத்த உற்பத்தியினை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
செவ்வாழையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, அதனால் தினம் ஒரு செவ்வாழைப்பழம் இரவு உணவிற்கு பின் ஒரு மணிநேரம் கழித்து சாப்பிட்டு வர செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, மலச்சிக்கல், வாயு தொல்லை வராமல் தடுக்கலாம்.
நரம்புத் தளர்ச்சி கொண்டவர்களின் கை, கால்கள் நடுக்க மேற்படும். அதற்கு செவ்வாழைப்பழத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குறையும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.