இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் கருத்துக்கேட்கப்படும் என்றும், அதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் இன்று நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 9, 10, 11, 12-ம் வகுப்புகள் உள்ள பள்ளிகளில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் இன்று கருத்துகள் கேட்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கலாம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
பெற்றோரிடம் இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் தமிழக அரசு அடுத்தக்கட்ட முடிவை எடுக்க உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளில் இந்த கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளன. சில தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கருத்துகளை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.