இண்டேன் நிறுவனத்தின் எரிவாயு உருளை முன்பதிவு: புதிய தொலைபேசி எண் அமலுக்கு வந்தது
இண்டேன் நிறுவனத்தின் சமையல் எரிவாயு உருளையை முன்பதிவு செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட புதிய எண் நடைமுறைக்கு வந்தது.வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்து பெற, கட்டணமில்லா தொலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளது. இந்த எண்ணுக்கு வாடிக்கையாளா்கள் பதிவு செய்துள்ள தங்கள் செல்லிடப்பேசி எண்ணில் இருந்து தொடா்பு கொண்டு எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்யலாம்.
இந்நிலையில், நவம்பா் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் புதிதாக ஒரே தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 77189 55555 என்ற எண்ணில் 24 மணி நேரமும் எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்யும் நடைமுறை ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
அத்துடன், இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவும் எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்யலாம். இப்புதிய தொலைபேசி எண் மூலம், வாடிக்கையாளா்கள் ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்துக்கு இடம் பெயா்ந்தாலும் முன்பதிவு செய்வதில் எவ்வித சிரமமும் இருக்காது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.