10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது! - தமிழக பள்ளிக்கல்வித்துறை
10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது! - தமிழக பள்ளிக்கல்வித்துறை
10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனிலும், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், 10-ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில், 5-ம் இயல் பிரிவில், திறன் அறிவோம் பகுதியில் குறுவினா ஒன்றில், "இந்தி கற்க விரும்பும் காரணம்" என்று குறிப்பிட்டு, அதற்கான காரணங்களை பட்டியலிட்டு, சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படங்களால் 10-ம் வகுப்பு பாடத்தில் இந்தி திணிப்பு என்று சர்ச்சை எழுந்த நிலையில், இந்தி திணிப்பு என்பது தவறான தகவல் என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் , 5-ம் இயல் பிரிவில், திறன் அறிவோம் பகுதியில், குறுவினா ஒன்றில் "தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் 3- வது மொழியைக் குறிப்பிட்டு காரணம் எழுதுக" என்று கேள்வி மட்டுமே கேட்கப்பட்டுள்ளதாகவும், 3-வது மொழி எது என்பது மாணவர்களின் விருப்பம் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
பாடப்புத்தகத்தில் இந்தி மொழி பற்றிய எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என்றும், இந்தி திணிப்பு என்று வெளியான தகவல் தவறானது என்றும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
பாடப்புத்தகங்களில் உள்ள வினாக்களுக்கு தனியார் பதிப்பகங்களின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் உரைகளில் ( Notes ) யாரேனும் இந்தி மொழி தொடர்பாக விடைகளை எழுதியிருக்கலாம் என்றும், அதற்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.