கேழ்வரகு மாவு - 250 கிராம்,
கருப்பு எள்ளு - 50 கிராம்,
சோம்பு - 2 டேபிள்ஸ்பூன்,
கற்கண்டு - 50 கிராம்.
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கேழ்வரகு மாவை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதனுடைய பச்சை வாடை போகும் அளவிற்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக கருப்பு எள்ளை சூடான கடாயில் கொட்டி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிக்சியில் வறுத்த எள்ளு, சோம்பு, கற்கண்டு இந்த 3 பொருட்களையும் போட்டு நன்றாக பொடி செய்து, அந்த பொடியை வறுத்த கேழ்வரகு மாவுடன் நன்றாகக் கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பொடியை தினசரி எப்படி பாலுடன் கலந்து குடிப்பது?
பாலை காய்ச்சி ஒரு டம்ளர் அளவு சூடாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு நீங்கள் அரைத்த பொடியை சேர்த்து, அதில் 1/4 டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இந்த கரைசலை சூடாக இருக்கும் பாலில் ஊற்றி கலந்து அப்படியே குடித்து விட வேண்டியது தான். தினமும் காலையில் காபி டீயை தவிர்த்து விட்டு இந்தப் பாலை குடிப்பது நல்லது. சோம்பு வாசம் பிடிக்காதவர்கள் சோம்புக்கு பதிலாக ஏலக்காய்களை சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இனிப்பே சேர்க்காமலும் இந்த பாலை பருகலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. உடலில் இருக்கும் கால்சியம் சத்துக் குறைபாட்டை சீக்கிரமே சரி செய்ய இந்த பால் உதவியாக இருக்கும். .
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.