மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் வகையில் பெண்கள் பள்ளிகள் இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆய்வு செய்தார். அதையடுத்துச் செய்தியாளர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது
'மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் வகையில் பெண்கள் பள்ளிகள் இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சிசிடிவி வசதி அமைத்துத் தர வேண்டும் என்று சில பள்ளிகள் கேட்டுள்ளன. இதுகுறித்தும் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வோம்.
அரசு சார்பில் நாப்கின் மற்றும் நாப்கின் எரியூட்டிகள், தேவைப்படும் பள்ளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி மாணவர் சேர்க்கை அதிக அளவில் உள்ளதால், அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு மட்டுமின்றி, ஆங்கிலவழிக் கல்வி போதிக்கும் ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை ஜூலை 31-ம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர்களுக்கு வழக்கமாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்வு நடைபெறும். தனித் தேர்வர்களுக்குத் தேர்வு நடைபெறும்போது, அரசு வழங்கும் பிளஸ் 2 மதிப்பெண்கள் போதாது என்று கூறுபவர்களும் தேர்வெழுதலாம். கரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்தால்தான் இந்த திட்டம். இல்லையெனில், அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும்.
எந்தக் காலகட்டத்திலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வை நுழையவிட மாட்டோம் என்பதே திமுக அரசின் கொள்கை. நீட் தேர்வைத் தடுக்க எந்தெந்த வழிவகை உள்ளதோ அதை முன்னெடுப்போம். நீட் தேர்வு விவகாரத்தில், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பட்ஜெட் கூட்டத் தொடரின்போது முதல்வர் உரிய முடிவை எடுப்பார்''.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.