ஊடகங்கள் வாயிலாக செய்திகளையும், செல்லிடப்பேசி வாயிலாக தனிப்பட்ட நபர்கள் ஒருவருக்கு ஒருவர் தகவல்களையும் பரிமாறிக் கொள்ளும் வரை இந்த அளவுக்கு பிரச்னை இல்லை. ஆனால், எப்போது செல்லிடப்பேசிகள் பன்முகத் திறமை கொண்டதாக மாறியதோ, அன்று ஆரம்பித்தது சிக்கல்.
வாக்கு செலுத்தினால் மை வைத்த கைவிரலை புகைப்படம் எடுத்து ஸ்டேட்டஸ் வைப்பது முதல் ஒரு நடிகருக்கு பிறந்தநாள் என்றால், அன்றைய தினம் பலருடைய ஸ்டேட்டஸ் அந்த நடிகருடையதாக மாறுவது வரை இந்த அக்கப்போர் நீளுகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்ட சான்றிதழ்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்க்கவும். உங்களின் முழு பெயர், வயது, இருப்பிடம் மற்றும் அடையாள அட்டையின் சில தகவல்களை மோசடி நபர்களுக்கு நீங்களே கொடுப்பது போன்றது. #cybercrime pic.twitter.com/IZfC3h829v
— DCP Adyar (@DCP_Adyar) June 28, 2021
இவ்வளவையும் செய்த நம்ம மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் சும்மா இருப்பார்களா? தடுப்பூசி செலுத்திக் கொள்வதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதோடு நின்றிருக்கலாம். சிலர் அப்படி புகைப்படம் எடுக்க முடியாவிட்டால், தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கிடைத்ததும், அதனை அவரவர் சுமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டு விடுகிறார்கள்.
ஆனால் இது மிகவும் தவறு என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திகொண்ட சான்றிதழ்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்க்கவும். உங்களின் முழு பெயர், வயது, இருப்பிடம் மற்றும் அடையாள அட்டையின் சில தகவல்களை மோசடி நபர்களுக்கு நீங்களே கொடுப்பது போன்றது என்று சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.