தமிழகத்தின் புதிய டி.ஜி.பி., சைலேந்திரபாபு
மிழக அரசின் புதிய டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.
தமிழகத்தின் தற்போதைய டி.ஜி.பி., திரிபாதியின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து புதிய டி.ஜி.பி.,யை தேர்ந்தெடுக்கும் பணி ஏற்கனவே துவங்கி விட்டது.
ஒரு டி.ஜி.பி.,யின் பதவிக்காலம் முடிவடையும் முன்னரே, அடுத்த டி.ஜி.பி.,க்கான தகுதியுள்ள அதிகாரிகள் சிலரது பெயர்களை தேர்வு செய்து, அந்த பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு, தமிழக அரசு அனுப்பி வைப்பது வழக்கம்.
தகுதி, சீனியாரிட்டி உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில், அந்த பட்டியலை பரிசீலிக்கும் உள்துறை மற்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள், அவர்களில் இரண்டு அல்லது மூன்று பெயர்களை இறுதி செய்து, தமிழக அரசுக்கு பரிந்துரையாக அனுப்பி வைப்பர்.
அதிலிருந்து ஒருவரை தேர்வு செய்து, புதிய டி.ஜி.பி.,யாக தமிழக அரசு நியமிக்கும்.
இந்நிலையில் தமிழக புதிய டி.ஜி.பி., தேர்வு குறித்த நடந்த ஆலோசனையின் போது தமிழக அரசால் வழங்கப்பட்ட பட்டியலில் மூன்று பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சைலேந்திர பாபு தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யப்பட்டார்.சைலேந்திரபாபு, தமிழக காவல்துறையின் 1987 ஆம் ஆண்டு பேட்ஸ் அதிகாரி ஆவார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.