1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அகரம் பவுண்டேஷன் 2021 - 2022 கல்வியாண்டிற்கான விதைத் திட்டத் தேர்வுப் பணி- பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

கல்வியே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம். அதைப் பயன்படுத்தி நீங்கள் இந்த உலகையே மாற்றமுடியும்" - நெல்சன் மண்டேலா

அனைவருக்கும் அன்பு வணக்கம்,🙇🏻‍♂️🙇🏻‍♀️

அகரம் பவுண்டேஷன் 2021 - 2022 கல்வியாண்டிற்கான ⏰ விதைத் திட்டத் தேர்வுப் பணிகளை தொடங்கியிருக்கிறோம். அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 🏢🏤 +2 படிக்கும் மாணவ மாணவியர்களில் 👦🏻👩🏻 உயர்கல்வி பயிலும் ஆர்வம் உள்ள, மேற்கொண்டு படிக்கும் பொருளாதார வசதிகள் இல்லாதவர்கள், இணைப்பில் இருக்கும் விண்ணப்பப் படிவத்தை 📄 பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க 📮 வழிகாட்டிடுங்கள். 


வருடத்திற்கு எட்டு லட்சம் மாணவர்கள் எழுதும் +2 பொது தேர்வில் 📋 தொலைதூர கிராமங்களில் முதல் தலைமுறை மாணவர்கள் சிறகடித்து பறப்பதற்கான 🦅 வானத்தை தேடி கண்டடைய இயலாதவர்களாகவே இருகின்றார்கள். உங்கள் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி 👨🏻‍🎓👩🏻‍🎓 பயில்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கிடுங்கள். கூட்டு புழுக்களாய் இருப்பவர்கள் கல்வி பெற்று வண்ணத்துப் பூச்சிகளாய் 🦋🦋 உருவாகி, இந்த உலகில் 🌏 வட்டமிட வைத்திடுவோம்.







ஊரடங்கு காலம் ஆதலால், மாணவர் விண்ணப்பப் படிவம் அடிப்படையில் கைப்பட பதில் எழுதி விண்ணப்பிக்க சொல்லிடுங்கள். 
உதாரணமாக 
S. No. 1 : <Student Name> 
S. No. 2 : <Gender>

ஏதேனும் சான்றிதழ் நகல் கைவசம் இல்லை என்றாலும் அதற்காக சிரமப்படாமல், கைகளில் இருக்கும் நகல் மட்டும் அனுப்பிடலாம். 

விண்ணப்பப் படிவ கேள்விகளுக்கான பதில்கள், குடும்ப சூழல் கடிதம் இரண்டும் வெள்ளைத் தாளில் எழுதி தபால் அல்லது கொரியர் வாயிலாக குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட சொல்லிடுங்கள்.

Agaram Foundation, 15, Krishna Street, Thiyagaraya Nagar, Chennai - 600017.


அன்புடன்,
அகரம் ஃபவுண்டேஷன்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags