தமிகழத்தில் பேருந்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் ஜூன் 28 காலை 6 மணிமுதல் பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்களை வகை 1, வகை 2 மற்றும் வகை 3 எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் வகை 3க்கு ஏற்கனவே பேருந்து சேவைகள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த 27 மாவட்டங்களிலும், மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகளை 50 சதவீத இருக்கைகளுடன் இயக்க அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் பேருந்து சேவையானது, ஜூன் 28ஆம் தேதி காலை 6 மணிமுதல் மீண்டும் தொடங்கப்படும் என தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
வகை 1 - (11 மாவட்டங்கள்)
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்
வகை 2 - (23 மாவட்டங்கள்)
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்,
திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.
வகை 3 - (4 மாவட்டங்கள்)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.