புதிய சேவை கட்டணம்: எஸ்.பி.ஐ.,யில் நாளை அமல்
'ஏ.டி.எம்., அல்லது தங்களது கிளைகளில் இருந்து மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால், சேவை கட்டணம் விதிக்கப்படும்' என, எஸ்.பி.ஐ., எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண முறை நாளை (ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்.,கள் அல்லது கிளைகளில் மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்தாவது பரிவர்த்தனை முதல், சேவை கட்டணமாக, 15 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் 10 பக்கங்கள் அடங்கிய காசோலை புத்தகத்தை பெற, 40 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். 25 பக்கங்கள் அடங்கிய காசோலை புத்தகம் தேவைப்பட்டால், 75 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்.மூத்த குடிமக்களுக்கு காசோலை புத்தகத்திற்கான புதிய சேவை கட்டண விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண முறை, நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.