மக்கள் மின்கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறை கொண்டுவர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அந்தவகையில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மின்கட்டணங்களை செலுத்த ரீசார்ஜ் முறையைக் கொண்டுவரவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதிய மின் பாதைகள் மற்றும் புதிய துணை மின் நிலையங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பாரத்நெட் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களின் கிராமங்களை மின்பாதைகளின் மூலம் இணைக்க ரூ.19,041 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.