ஏடிஎம் கார்டு
இன்றைய காலகட்டத்தில் நேரடியாக வங்கிக்கு சென்று பணம் எடுக்க யாருக்குமே நேரம் இருப்பதில்லை. அதனால் அனைவரும் ஏடிஎம் மூலமாக தான் பணத்தினை எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு வங்கியிலும் ஏடிஎம் மூலமாக பணம் எடுப்பதற்கு பல விதிமுறைகள் இருக்கின்றது.
அந்த வகையில் எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் மூலமாக பணம் எடுப்பதற்கு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதிகள் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி,
அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் மூலமாக ஒரு மாதத்திற்கு 4 முறை இலவசமாக பணம் எடுக்கலாம்.
வேறு வங்கி கிளை ஏடிஎம் மூலமாக கூட இலவசமாக 4 முறை பணம் எடுத்து கொள்ளலாம்.
4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 15 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர வங்கிகளில் பணம் எடுத்தாலும் இதே கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாக வழங்கப்பட்ட 10 பக்க செக்கை பயன்படுத்தி கொள்ளலாம்.
10 பக்கங்கள் பயன்படுத்திய பிறகு, மீண்டும் 10 செக் பயன்படுத்த 40 ரூபாய் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 செக் பயன்படுத்த 75 ரூபாய் + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். எமர்ஜென்சி செக் புத்தகத்துக்கு 50 ரூபாய் + செலுத்த வேண்டும்.
இதர வங்கி ஏடிஎம்களில் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தினை இலவசமாக பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.