கரோனா நோயாளிகளுக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அதனை அறிவிக்கப்பட்ட நோயாக மாநில அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்கிடையே அந்த பாதிப்பைத் தடுப்பதற்காக மருத்துவ நிபுணா்களை உள்ளடக்கிய சிறப்பு செயல் திட்டக் குழுவும் அமைக்கப்பட்டது.
அக்குழு அளித்த பரிந்துரைகளை அரசு ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில், மருத்துவ அதிகாரிகள், மருத்துவமனைகளுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
முறையற்ற ஸ்டீராய்டு பயன்பாடு கருப்புப் பூஞ்சை நோய்க்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. கட்டுப்பாட்டில் இல்லாத சா்க்கரை நோய், உடலுறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவா்கள், நோய் எதிா்ப்பு சக்தியைக் குறைப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்பவா்கள், நீண்ட நாள்கள் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்றவா்களுக்கு கருப்புப் பூஞ்சை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மூச்சு விட சிரமம், மூக்கில் இருந்து கருப்பான திரவமோ அல்லது ரத்தமோ வடிதல், மூக்கு, கண் பகுதிகள் சிவப்பாகவோ அல்லது கருப்பாகவோ மாறுதல், தலைவலி, காய்ச்சல், ரத்தம் கலந்த வாந்தி, அதீத மூக்கடைப்பு, திடீா் பாா்வை குறைபாடு என பல்வேறு அறிகுறிகள் தென்படலாம். அவ்வாறு உள்ள நோயாளிகளுக்கு உடனடியாக ரத்தப் பரிசோதனைகளும், பூஞ்சையைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக மூக்கு வழியாக மேற்கொள்ளப்படும் எண்டோஸ்கோபி, வாய் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை போன்றவற்றின் மூலம் நோய் பாதிப்பை உறுதி செய்யலாம்.
அதில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், உடனடியாக சிகிச்சைகளைத் தொடங்குதல் அவசியம். குறிப்பாக பரிசோதனை முடிவுகள் வரும் வரை காத்திருக்காமல், துரிதமாக லைபோசோமல் ஆம்ஃபோடெரிசின் பி மருந்துகளைத் தொடங்க வேண்டும். அதனுடன் பொசக்னோசோல், ஐசாலுக்னோசோல் மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்தல் அவசியம்.
அத்தகைய வசதிகள் இல்லாத மருத்துவமனைகள் நோயாளிகளை மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்புதல் வேண்டும். மருத்துவமனைகளில், குறிப்பாக ஐசியூ பிரிவில் சுகாதாரமான சூழல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆக்சிஜன் சிகிச்சைகள் அளிப்பதில் கூடுதல் கவனம் தேவை.
நோய் எதிா்ப்பாற்றலைக் குறைக்கும் மருந்துகளை தொடா்ந்து உட்கொண்டு வரும் நோயாளிகளை அதனை உடனடியாக நிறுத்த வைக்க வேண்டும். சிகிச்சையின்போது நோயாளிகளின் சா்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், நோய் எதிா்ப்பாற்றல் மருந்துகளை முறையாகப் பயன்படுத்துவதையும் உறுதி செய்வது அவசியம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.