சூரியனை கடக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் படம்: நாசா வெளியீடு
பூமிக்கும் மேலே உள்ள சர்வதேச விண்வெளி நிலையம் சூரியனுக்கு எதிரே கடக்கையில் கொசு போல காட்சியளிக்கும் படத்தை நாசா விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ளது.

பூமியிலிருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் தாழ் வட்டப் பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளின் கூட்டு முயற்சியாக இந்நிலையம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையத்தின் படம் ஒன்றை சமீபத்தில் அமெரிக்காவின் விர்ஜினியாவிலிருந்து எடுத்துள்ளனர். பிரம்மாண்ட மஞ்சள் ஆரஞ்சு வண்ண சூரியனுக்கு நடுவே கொசு போல சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட படத்தை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்துள்ளனர்.
அப்படத்தை 7 பிரேம்களாக எடுத்து நாசா தொகுத்து வழங்கியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் விநாடிக்கு சுமார் 8 கி.மீ வேகத்தில் பயணிப்பதாகவும் நாசா கூறியுள்ளது.

இப்புகைப்படம் எடுக்கப்பட்ட சமயத்தில் விண்வெளி வீரர்கள் ஷேன் கிம்பரோ மற்றும் தாமஸ் பெஸ்குவெட் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளது. ஸ்பேஸ்வாக் மூலம் அவர்கள் 6 மணி நேரம் 45 நிமிடங்கள் பணியாற்றி விண்வெளி நிலையத்திற்கு மின்சாரத்தை அதிகரிக்கும் சோலார் தகடுகளை பொருத்தியதாக கூறியுள்ளது..
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.