பள்ளிகளை திறக்க தீவிரமாக முயல வேண்டும்: எய்ம்ஸ் இயக்குநர் கருத்து
'பள்ளிகளைத் திறக்க தீவிரமாக முயல வேண்டும்' என, எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று பரவலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து, கடந்த ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு மேல்நிலை வகுப்புகள் நடத்தப்பட்டன. கோவிட் 2வது அலை வேகமெடுத்ததால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. புதிய கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் விளிம்புநிலைக் குழந்தைகளுக்கு இணைய வழிக் கல்வி பெரும்பாலும் சாத்தியமாகவில்லை. இந்நிலையில் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளதாவது:
பள்ளிகள் பாடம் கற்பிக்கும் இடமாக மட்டும் இருப்பதில்லை. ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் தனித்தனித் திறமைகளோடு வளர்கிறார்கள். சக மாணவர்களுடன் ஒவ்வொருவரும் உரையாடுகிறார்கள். குழந்தைகளிடம் தனித்திறனை வளர்ப்பதில் பள்ளிகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
இளம் தலைமுறை, குறிப்பாக ஆன்லைன் வகுப்புகளுக்கு வசதியில்லாத விளிம்புநிலை மாணவர்களில் கல்வி தற்போது கடுமையாக பாதித்துள்ளது. ஆகவே, மீண்டும் பள்ளிகளை திறக்க நாம் தீவிரமாக முயல வேண்டும். அதுகுறித்த திட்டங்கள் விரைவில் வகுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.