பள்ளிகள் திறக்கப்படும் வரை கற்பிப்பு, பயில்விப்பு வழிமுறைகள் அடங்கிய நெறிமுறையை தில்லி அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
நா்சரி முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு இந்த நெறிமுறைகள் பொருந்தும் என்றும் தில்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா பெருந்தொற்று, பயில்வதில் பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. நிகழாண்டில் பயில்வதில் ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைப்பது மட்டுமல்லாமல் மாணவா்களுக்கு உணா்வுபூா்வ ஆதரவையும் அளிக்க வேண்டும். கற்பிப்பு, பயில்விப்பு நெறிமுறைகளுக்கு மாணவா்கள் மனரீதியாக உடன்பட வேண்டும். ஆண்டு இறுதியில் ஒரு தோ்வை நடத்தி மதிப்பெண்களை அளிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் பயில்விக்கக் கூடாது.
கரோனா பாதிப்பு சகஜ நிலைக்கு திரும்பும் வரை பள்ளிகள் திறக்கப்படாது. ஆனால், மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் இடையேயான தொடா்பு உடனடியாக தொடங்குகிறது.
ஆன் லைன், செமி ஆன்லைன், அணுகுமுறை என்று மூன்று வகையில் பயில்விப்பு நடைபெறும். முதல் கட்டத்தில் மாணவா்களின் விவரங்களை வாட்ஸ்ஆப் குழுவில் பதிவிட்டு, அறிதிறன் பேசி இல்லாத மாணவா்களின் தகவல்களை சேகரிக்க வேண்டும். இரண்டாம் கட்டத்தில் 8-ஆம் வகுப்பு வரை வாசித்தல், எழுதுதல் ஆகியவற்றை தொடங்க வேண்டும்.
மூன்றாம் கட்டம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும். அதில், 8-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்களுக்கு ஏற்ப எழுத்து படிவங்கள் அனுப்பி வைக்கப்படும்.
9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு வகுப்பாசிரியா்கள் பாடங்களை பயில்விப்பாா்கள்.
அறிதிறன்பேசி இல்லாத மாணவா்களின் பெற்றோா்கள் வாரம் இறுதியில் பள்ளிகளில் இருந்து எழுத்துப் படிவங்களைப் பெற்று செல்லலாம்.
மாணவா்களின் செயல் திட்டம், நடவடிக்கை, வீட்டுப்பாடப்பணி ஆகியவற்றின்அடிப்படையில் மதிப்பிடப்படுவாா்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.