மனித உடலில் கரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதைப்போல், அறிதிறன்பேசி செயலிகளிலும் வைரஸ்கள் பரவி பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன.
இது செல்லிடப்பேசிகளுக்கு மட்டும் பாதிப்பாக அமைவதில்லை. மாறாக அதில் உள்ள தகவல்கள் திருடப்பட்டு நமக்கு பொருளாதாரப் பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடுகின்றன.
இதுபோன்ற அபாயகரமான அறிதிறன்பேசி வைரஸ்களில் ஒன்றுதான் "ஜோக்கர்'. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆன்ட்ராய்டு செயலிகளில் இந்த வைரஸ் இருப்பதைக் கண்டுபிடித்த கூகுள், அதை நீக்கியது.
தற்போது எட்டு ஆன்ட்ராய்டு செயலிகளில் அந்த வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிலியரி மெசேஜ், பாஸ்ட் மேஜிக் மெசேஜ், ஃபிரி காம்ஸ்கேனர், சூப்பர் மெசேஜ், எலிமென்ட் ஸ்கேனர், கோ மெசேஜஸ், டிராவல் வால்பேப்பர்ஸ், சூப்பர் எஸ்எம்எஸ் ஆகிய எட்டு செயலிகளில் ஜோக்கர் வைரஸ் உள்ளதாகக் கூறி கூகுள் நீக்கி உள்ளது.
இந்த வைரஸ் அறிதிறன் பேசிகளில் உள்ள தகவல்களையும், எஸ்எம்எஸ்களையும், தொலைபேசி எண்களையும், ஓடிபி ஆகியவற்றையும் திருடி அதன் மூலம் பண மோசடியில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கிறது.
ஆன்ட்ராய்டு பயன்பாட்டாளர்களைக் குறிவைத்து இந்த வைரஸ் செயல்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 செயலிகளையும், அக்டோபரில் 34 செயலிகளையும் கூகுள் நீக்கி உள்ளது. இந்த செயலிகள் 1,20, 000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பரவிய செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கினாலும், அதை முன்பு பதிவிறக்கம் செய்து அழிக்காமல் வைத்திருந்தாலும் உங்கள் தகவல்கள் திருடப்படும்.
இதனால் இந்த எட்டு செயலிகளை வைத்திருப்பவர்கள் தாமதமின்றி அவற்றை அழிக்க வேண்டியது கட்டாயம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.