புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்..!!
திமுக அரசு, தேர்தல் நேரத்தில் புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளிஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்திஉள்ளனர்.
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இணையவழி மூலம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் தீனதயாள் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி, பொருளாளர் ருக்மாங்கதன், மகளிரணி செயலாளர் உஷா ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- கூட்டத்தில் திமுக சார்பில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த 'புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து' என்பதை நடைமுறைப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.
- இதேபோல், 'ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற ஆணையிட வேண்டும்.
- ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு துறையின் ஒன்றிய தலைமையிடத்தில் வைத்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்பை மாவட்ட ஆட்சியர் மூலம் ஏற்படுத்தி தர வேண்டும்.
கற்றல்-கற்பித்தல் நிகழ்ச்சிகள்:
- கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் தற்போது திறக்கும் சூழல் இல்லாதபோது மாணவர்களின் கற்றலில் நிகழ்வு பின் தங்காத வகையில் கல்வித் தொலைக்காட்சி மூலம் கற்றல் - கற்பித்தல் நிகழ்ச்சிகளை அரசு சிறப்பாக செயல்படுத்தி வரும் நிலையில் ஆசிரியர்கள், அரசு கூறும் வழிகாட்டுதலைப் பின்பற்றி மாணவர்களுக்கு கல்வி சென்றடைய அனைவரும் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
- கடந்த ஆண்டு முதலே அங்கன்வாடி மற்றும் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் நடைபெறவில்லை. ஆனால் தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்று அதற்கான கட்டணங்கள் ஆயிரக்கணக்கில் பெறப்பட்டது.
- தனியார் பள்ளிகளில் ஐந்து வயது முடிந்த மாணவரை நேரடியாக முதல் வகுப்பில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- NEET இல்லாத தமிழகமாக மாற்றும் முயற்சியாக அதற்கென வல்லுநர் குழு அமைத்த முதல்வருக்கு நன்றி' என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.