1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

NMMS திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளின் தபால் தலை வெளியீடு

திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற கடலையூர் பள்ளி மாணவிகளின் தபால் தலை வெளியீடு


தேசிய மற்றும் ஊரக திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற கடலையூர் செங்குந்தர் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் தபால் தலை வெளியிடப்பட்டது.




தேசிய திறனாய்வுத் தேர்வில் கோவில்பட்டி அருகே கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி மாணவர் தமிழ்ச்செல்வன், மாணவி செந்தமிழ்ச் செல்வி, ஊரக திறனாய்வுத் தேர்வில் மாணவிகள் ரம்யா, சிவப்பிரியா, செல்வலட்சுமி, நந்தினி, கோமதி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களை கவுரவிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் அச்சிட்ட  தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடந்தது


நிகழ்ச்சிக்குப் பள்ளியின் செயலாளர் மா.மாரிமுத்து தலைமை வகித்து, மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் அச்சிட்ட தபால் தலைகளை வெளியிட்டார். இதில், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் சங்கரசுப்பு, தலைமை ஆசிரியர் விவேகானந்தன், ஆசிரியர்கள் திலகவல்லி, அய்யமுத்துராஜா, மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர். தேசிய திறனாய்வுத் தேர்வு பொறுப்பாசிரியர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்



Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags