இவ்வாறு இசையை, குறிப்பாக மெல்லிய இசையை கேட்பதால் மனச்சோர்வு, மன அழுத்தம் குறைகிறது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உடற்பயிற்சியின்போது இசையைக் கேட்பது நல்லதா என்பது குறித்து என்று எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஆய்வினை மேற்கொண்டனர்.
அதன்படி, உடல் இயங்கும்போது உடல் இயக்கத்திற்கேற்ப கேட்கப்படும் இசையானது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் செயல்திறனை மேம்படுத்துகிறது என்கிறது இந்த ஆய்வு.
ஆய்வின் கண்டுபிடிப்புகள் மனித விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆய்வில் 18 உடற்பயிற்சி செய்வோர் கலந்துகொண்டனர். இதில் இரண்டு விதமாக சோதனை செய்யப்பட்டது.
அதாவது அதிக வேகத்தில் ஓடும்போதும் மெதுவான வேகத்தில் ஓடும்போதும் இசை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சோதனை நடத்தப்பட்டது.
இதற்காக பயிற்சியின்போது ஊக்கத்தை ஏற்படுத்தும் விதமான பாடல்களை கேட்க அறிவுறுத்தப்பட்டனர். அதன்பின்னர் இசையை கேட்காமல் உடற்பயிற்சி செய்தனர். இதில் இரண்டு சோதனைகளிலும் அவரது பயிற்சித் திறன், மனநலம் உள்ளிட்டவை குறித்து சோதிக்கப்பட்டதில் இசையை கேட்கும்போது அவர்கள் மகிழ்ச்சியாகவும் அதேநேரத்தில் உடற்பயிற்சி செயல்திறன் நன்றாகவும் இருந்துள்ளது .
உடற்பயிற்சியின்போது பாடல்களை கேட்கும்போது மனச்சோர்வு குறைகிறது. ஒருவரின் உடற்பயிற்சித் திறனை அதிகரிக்க இசையை பயன்படுத்தலாம். அதிலும் குறிப்பாக ஒவ்வொருவரும் உடற்பயிற்சியின்போது தங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்கும்பட்சத்தில் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம்.
மேலும் உடற்பயிற்சிக்கு ஏற்ற தாளத்தை கேட்கலாம். வேகமான உடற்பயிற்சி செய்யும்போது வேகமான ஒரு இசையைக் கேட்க வேண்டும். இம்மாதிரியான இசைகள் ஒவ்வொருவரிடம் வெவ்வேறு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.