பான் கார்டு- ஆதார் எண் இணைப்பு: செப்.,30 வரை நீட்டிப்பு
ஆதருடன், 'பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இணைப்பதற்கான அவகாசம், செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வருமான வரி தாக்கல் சார்ந்த பல்வேறு நடைமுறைகளுக்கு காலக்கெடுக்கள் நீட்டிக்கப்படுகின்றன. ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊழியர்களுக்கு, டி.டி.எஸ்., எனப்படும் வருமான வரி பிடித்தம் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள், ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறும் ஊழியர்களுக்கு, தொழில் நிறுவனங்களால் வழங்கப்படும் உதவித் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
இதேபோல், கொரோனாவால் உயிரிழக்கும் ஊழியரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகைக்கும், வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.