பள்ளிகளை படிப்படியாக திறக்க வலியுறுத்தல்
சங்க நிர்வாகிகள், தலைமை செயலகத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அதன்பின் நந்தகுமார் அளித்த பேட்டி:தனியார் பள்ளிகளுக்காக மாணவர்களை அழைத்து வர, 50 ஆயிரம் வாகனங்களை இயக்கி வருகிறோம். மார்ச் 17 முதல் பள்ளி வாகனங்கள் இயங்கவில்லை.
ஓடாத வாகனங்களுக்கு சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ், எப்.சி., கட்டணம் செலுத்தும் படி கூறுகின்றனர். இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.பள்ளிகளை திறக்காதபோது, வாகனங்களுக்குரிய வரிகளை செலுத்த இயலவில்லை. கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கி உள்ளனர். இருக்கை வரி, சாலை வரி, இன்சூரன்ஸ் போன்றவற்றிலிருந்து விலக்கு அளிக்கும்படி, போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
பள்ளிகளை படிப்படியாக திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில், பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளை துவக்கலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறக்கலாம். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்
What happened to the collected fees? Even they won't pay salary to the Teaching staff also. But they collected full fees.
ReplyDelete