பள்ளிகளை திறப்பது எப்போது? 'எய்ம்ஸ்' இயக்குனர் தகவல்!
குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைத்துவிட்டால், அது, பள்ளிகளை மீண்டும் திறக்க வழிவகுக்கும்,” என, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கிடையே, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. எனினும், குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது.எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:நம் நாட்டில், குழந்தை களுக்கான தடுப்பூசிகள் விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.
'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 2 - 18 வயதினருக்கான, 'கோவாக்சின்' தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதன் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளின் தரவுகள், செப்டம்பரில் கிடைத்துவிடும்.அதற்கு, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், உடனடியாக அந்த தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு செலுத்தும் பணிகள் துவங்கப்படும்.
சாதனை
அதற்கு முன், அமெரிக்காவின் 'பைசர்' நிறுவன தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்துவிட்டால், அதுவும் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் கிடைத்து விட்டால், அது ஒரு மைல்கல் சாதனையாக அமையும். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு, இந்த தடுப்பூசிகள் வழிவகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.