1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கடந்த ஆண்டுகளில் தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கைகுறைந்ததற்கான அறிக்கையை மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி முருகேசன் வழங்கினார்

கடந்த 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, பொறியியல் / வேளாண்மை / கால்நடை / மீன்வளம்/ சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்ய, ஓய்வுபெற்ற டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.


இதையடுத்து பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, இந்தக் குழு முதல்-அமைச்சர் ஸ்டாலினிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 


அதன்படி தொழிற்படிப்புகளில் கடந்த ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் சேர்ந்துள்ளனர், எந்த அளவு உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்பன உள்ளிட்ட அம்சங்களுடன் 86 பக்க அறிக்கையை முதல்-அமைச்சரிடம் வழங்கியுள்ளனர். ஆணையம் பரிந்துரைத்துள்ள உள் ஒதுக்கீட்டை பரிசீலனை செய்து, இந்த ஆண்டே உள் ஒதுக்கீடு வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags