கல்லூரி தேர்வுகளை நடத்துவது குறித்து ஆராய உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தேர்வுகளை நடத்துவது குறித்து ஆராய உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த குழுவில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட 9 பேர் உறுப்பினர்களாகவும், தொழில்நுட்ப கல்வி இயக்குநரக ஆணையர் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல் படி, செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது பற்றி, இந்த குழு அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் தேர்வுகளை நடத்துவது குறித்து அரசு முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.