இந்த நிலையில், யுபிஐ மூலமாக பணபரிவர்த்தனை சேவைகளை வாட்ஸ் அப் வழங்க மத்திய அரசின் என்.பி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற செயலிகள் பணப்பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி வாட்ஸ் அப் பே மூலம் சுலபமாக பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். வாட்ஸ் அப் செயலியை பெரும்பாலானோர் பயன்படுத்துவதால், மற்ற செயலிகளுக்கு இதனால் நெருக்கடி ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.
வாட்ஸ் அப் பே சேவைக்கு இந்தியாவில் அனுமதி கிடைத்திருப்பது குறித்து பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறும் போது, இந்தியா முழுவதும் வாட்ஸ் அப் பே சேவைக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், இதை சாத்தியமாக்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வாட்ஸ் அப் மூலமாக உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எந்த கட்டணமும் இன்றி நீங்கள் பணம் செலுத்த முடியும். இந்த பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.