இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் சூரியகாந்தி விதை.:
சூரியகாந்தி விதையில் இனிப்பு சுவையுடன் உடலுக்கு அவசியமான பல்வேறு சத்துக்கள் அடங்கி உள்ளன. மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும் இதனை கொறித்து உண்கின்றன. சூரியகாந்தி விதைகள் ஆரோக்கியமான எண்ணெய் தயாரிக்கப் பயன்படும்.
உலகம் முழுவதும் சூரியகாந்தி எண்ணெய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. சூரியகாந்தி விதைகள் அதிக நினைவாற்றல் தரக்கூடியது. நல்ல சுவையுடைய இதனை மற்ற பருப்புகள் போலவே மென்று சாப்பிடலாம். 100 கிராம் விதைகள் 584 ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
இதில் நிறைந்துள்ள கொழுப்பு அமிலங்களே உடலுக்கு அதிக ஆற்றலைத் தருகின்றன. லினோலெய்க் ஆசிட் எனப்படும் பூரிதமாகாத கொழுப்பு இதில் மிகுதியாக உள்ளது.
இது கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்பின் அளவைக் குறைக்க பெரிதும் உதவும். இது நல்ல கொழுப்புகளான எச்.டி.எல். கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்.
சூரியகாந்தி விதைகள் அதிக புரதம் உடைய பருப்பு வகையாகும். டிரிப்டோபான் எனும் சிறப்புக்குரிய அமினோ அமிலம் இதிலுள்ளது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிக அவசியமானது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.