உடம்பில் உண்டாகும் கொழுப்பு கட்டி கரைய எளிமையான வீட்டு வைத்தியம் !
உடலில் வலியே இல்லாமல் கைகள், கால் பகுதி, தொடை, மார்பு கீழ், அக்குள், வயிறு போன்ற உறுப்புகளில் இருக்கும் வலி இல்லாத கட்டியே கொழுப்பு கட்டிகள் என்று அழைக்கப்படுகிறது.
கொழுப்பு கட்டிகள் வலியற்றவை என்றாலும் கூட அதை கரைக்க வீட்டு வைத்தியம் உண்டு. குறிப்பாக பெண்கள் மார்பு பகுதியில் இந்த கொழுப்பு கட்டியை பார்த்ததுமே அது கேன்சராக இருக்குமோ என்று பயப்படுவது உண்டு.
உடலில் கொழுப்பு அதிகம் தேங்கும் போது அது கட்டிகளாக மாறும். அதனால் இந்த கட்டிகள் உடல் பருமனாக இருப்பவர்களுக்குத்தான் வரும் என்பதில்லை. உடல் ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கூட வரலாம். உடலில் கொழுப்புகள் கரையாமல் இருக்கும் போது தான் இந்த கட்டிகள் உருவாகிறது. இதை கரைக்க எளிமையான குறிப்புகளை பின்பற்றினாலே போதுமானது. என்ன செய்தால் எளிதாக கொழுப்பு கட்டியை கரைக்கலாம் தெரிந்துகொள்வோம்.
உணவு முறையில் - வெந்நீர்
பொதுவாக உடல்பருமனாக இருப்பவர்கள் வெந்நீர் குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் கொழுப்பு கட்டியை கரைக்கவும் வெந்நீர் உதவக்கூடும். ‘தினமுமே தண்ணீரை இளஞ்சூட்டில் குடித்துவந்தால் அவை உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை படிப்படியாக கரைக்கும். இந்த கொழுப்பு உடலில் தங்காமல் வெளியேறவும் செய்யும்.
வெந்நீர் போன்று சீரகம், சோம்பு, கருஞ்சீரகம் என தினம் ஒன்றாக கொதிக்க வைத்து குடித்து வரலாம். இந்த நீரையும் வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவர வேண்டும். குறிப்பாக அசைவ உணவு எடுத்துகொள்ளும் போதும். தொடர்ந்து இந்த வெந்நீரை குடித்துவந்தால் உடலில் கொழுப்பு கட்டி கரைவதோடு உடலுக்கு வேறுவிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
கல் உப்பு ஒத்தடம்
சுத்தமான பருத்தி துணியை எடுத்து கைக்குட்டை அளவு கத்தரித்து அதன் நடுவில் பிடி அளவு கல் உப்பு சேர்த்து மூட்டை கட்டவும். இதை சுத்தமான நல்லெண்ணெயில் நனைத்து ( அடிப்பகுதி மட்டும்) வைக்கவும். அடிகனமான தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி பொறுக்கும் சூட்டில் இதை சூடுகாட்டி எடுத்து கட்டிகள் இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
தினமும் இரண்டு வேளை கொடுக்கலாம். சூடு ஆற ஆற உப்பு மூட்டையை மீண்டும் சூடாக்கி கொடுக்கலாம். அதே போன்று நல்லெண்ணெய்க்கு மாற்றாக விளக்கெண்ணெயும் பயன்படுத்தலாம்.
உணவு முறையில் -கமலா ஆரஞ்சு
பலரும் வைட்டமின் நிறைந்த ஆரஞ்சு என்றால் முழுக்க ஆரஞ்சு நிறத்தில் பளபளவென்று இருக்ககூடியது என்று நினைக்கிறார்கள். ஆனால் நமது நாட்டு ஆரஞ்சு கமலா ஆரஞ்சு என்று அழைக்கப்படும். இது பார்ப்பதற்கு பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். அளவிலும் சிறியதாக இருக்கும். இதன் தோல் சுருங்கியும் கூட இருக்கலாம்.
இந்த ஆரஞ்சை தோலுரித்து கொட்டை நீக்காமல் சுளைகளை சாப்பிட்டு வர வேண்டும். இது உடலில் இருக்கும் கொழுப்பை வெளியேற்றுகிறது. அதிக அளவு வேண்டாம். தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டாலே போதுமானது. நாளடைவில் பலன் தெரியும்.
வெளிப்புற சிகிச்சை - கொடி வேலி தைலம்
நாட்டு மருந்து கடைகளில் கொடிவேலி தைலம் கிடைக்கும். மூலிகை குணமிக்க இந்த கொடிவேலி தைலத்தை இரவு நேரங்களில் படுக்கும் போது கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.
ஐந்து விரல்களின் முனையை கொண்டு இலேசாக கட்டிகள் மீது தட்டி தட்டி விடவேண்டும். இரவு முழுவதும் அவை ஊறி சருமம் உறிஞ்சு கொள்வதோடு கட்டிகள் படிப்படியாக கரையக்கூடும். இவை பக்கவிளைவு இல்லாதவை என்பதால் தயக்கமில்லாமல் பயன்படுத்தலாம்.
கரைந்த பிறகு செய்ய வேண்டியது
கொழுப்பு கட்டிகள் கரைந்த பிறகு மீண்டும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உண்டு. அதனால் உணவில் கவனம் செலுத்த வேண்டும். சாப்பிட்ட பிறகு ஒரே இடத்தில் உட்காருவதால் உணவில் இருக்கும் கொழுப்பானது உடல் திசுக்களில் சேர்ந்து மீண்டும் கொழுப்பு கட்டிகளை உண்டாக்கக்கூடும்.
அதனால் இயன்றளவு உடல் உழைப்பும், உடல்பயிற்சியும் மேற்கொண்டால் கரைந்த கொழுப்பு கட்டிகள் மீண்டும் வராமல் தடுக்க முடியும். வலி இல்லாத கட்டிகளாக இருந்தாலும் இதை கரைக்க முயற்சி செய்யாமல் உணவு முறையிலும் அலட்சியம் செய்யும் போது, கட்டிகள் பெரிதாக கூடும். பிறகு இதற்கு தீர்வு அறுவை சிகிச்சை மட்டுமே.
அதோடு ஒரு முறை அறுவை சிகிச்சை செய்தாலும் இந்த கட்டி மீண்டும் மீண்டும் வரக்கூடும் என்பதால் எளிமையான இந்த குறிப்பை பின்பற்றி ஆரம்பத்திலேயே கொழுப்பு கட்டிகளை கரைப்பதுதான் சிறந்த தீர்வாக இருக்கும்.உங்கள் உடலிலும் கட்டிகள் இருக்கான்னு செக் பண்ணுங்க !
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.