1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பள்ளிகள் திறப்பு : அதிகாரிகளுடன் செங்கோட்டையன் ஆலோசனை

 

பள்ளிகள் திறப்பு : அதிகாரிகளுடன் செங்கோட்டையன் ஆலோசனை





பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், நேற்று கல்வித் துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, மார்ச், 25ல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல், பள்ளிகள், கல்லுாரிகள் உள்ளிட்ட, கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. 


தற்போது, கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், வரும், 16ம் தேதி முதல், 9 முதல், 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள்; அனைத்து கல்லுாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்பட, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

 அதைத் தொடர்ந்து, பள்ளிகளை திறப்பது குறித்து, அமைச்சர் செங்கோட்டையன், நேற்று தலைமைச் செயலகத்தில், கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


பள்ளி கல்வித் துறை செயலர் தீரஜ்குமார், இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

 பள்ளிகள் திறப்பு; மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அச்சத்தை போக்குவது; மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, கடைபிடிக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்; நோய் தடுப்பு நடவடிக்கைகள்; மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, விரைவில், நிலையான வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்படும்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags