வெறும் வயிற்றில் குடிக்க வேண்டியவை.:
இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் சத்தான உணவுகளையும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களையும் உணவாக எடுத்துக்கொள்வதில்லை. மேலும் கடைகளில் விற்கும் குளிர்பானங்களையும், உடலுக்கு கேடு விளைவிக்கும் பானங்களையும் மட்டுமே தேடி தேடி உண்கிறார்கள். எனவே காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டிய இயற்கை பானங்களைப் பற்றி இங்கு காண்போம்.
தண்ணீர்.:
👉 தினந்தோறும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்திற்குள், ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை குடிக்க வேண்டும்.
👉 ஏனெனில் தண்ணீரானது அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ச்சியாக தண்ணீர் குடித்து வருவதால் சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் குறைக்க முடியும்.
நெல்லிக்காய்ச் சாறு.:
👉 வெறும் வயிற்றில் தினந்தோறும் நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
👉 மேலும் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் இது மிகவும் சிறந்தது.
வெந்தயத் தண்ணீர்.:
👉 முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.
👉 வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை உண்டாக்கி விடும்.
வெள்ளைப்பூசணி சாறு.:
👉 தொப்பை மற்றும் ஊளைச்சதையை விரைவில் குறைக்க, வெறும் வயிற்றில் வெள்ளைப்பு+சணி சாறு குடித்துவர வேண்டும். மேலும், இதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும்.
👉 இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்ப்பது நல்லது.
அருகம்புல் சாறு.:
👉 வெறும் வயிற்றில் அருகம்புல் சாறினை அருந்துவதன் மூலம் அல்சரை தடுக்கலாம். அருகம்புல்லின் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.