31-ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஜூலை 5-ந்தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா ஏற்படுத்திய இடையூறுகளால் இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்றின் வேகம் குறைய தொடங்கியிருக்கும் நிலையில், இந்த தேர்வுக்கான புதிய தேதியை மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாடு முழுவதும் 112 நகரங்களில் கடந்த ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டு, பின்னர் நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு, அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 31-ந் தேதி நடைபெறும். சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கு வசதியாக, இந்த தேர்வு 135 நகரங்களில் நடத்தப்படும்’ என தெரிவித்தார்.
இதற்கிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தங்கள் தேர்வு மையங்களை மாற்றுவதற்கு அனுமதி அளிக்குமாறு ஏராளமான தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருப்பதால், தாங்கள் தேர்வு செய்திருக்கும் நகரங்களை மாற்றியமைக்க ஒரு முறை வாய்ப்பு வழங்கப்படுவதாக சி.பி.எஸ்.இ. மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.