தமிழகத்திலுள்ள அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவது அவசியமாகிறது . மேலும் அரசால் பல்வேறு நல திட்டங்கள் மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன . இருப்பினும் மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி மூலம் பள்ளிக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன .
சிலப்பள்ளிகளில் மேற்கண்டவாறு குழாய் இணைப்புகள் பெற்று மாணவர் பயன்பாட்டில் இருந்து வருகின்றன என அறியமுடிகிறது . ஆனால் சில பள்ளிகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் இல்லாத நிலை உள்ளது . எனவே அதுபோன்ற பள்ளிகளின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பாக ( ஆங்கிலத்தில் Excel ) தட்டச்சு செய்து இச்செயல்முறைகள் கண்ட இரு தினங்களுக்குள் இவ்வியக்ககத்திற்கு Soft Copy யை idssed@nic.in என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் விவரத்தை இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.