1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

வங்கிகளின் சேவை கட்டணங்கள் உயர்வு? மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

வங்கிகளின் சேவை கட்டணங்கள் உயர்வு? மத்திய நிதியமைச்சகம் விளக்கம்


சில பொதுத் துறை வங்கிகளின் சேவை கட்டணங்கள் அதிகளவில் உயர்த்தப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

ஏழைகள் மற்றும் சமூகத்தின் வங்கி சேவைகள் சென்றடையாத பிரிவினர் தொடங்கிய 41.13 கோடி ஜன் தன் கணக்குகள் உள்ளிட்ட 60.04 கோடி அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்த இலவச சேவைகளுக்கு எந்த விதமான சேவை கட்டணமும் இல்லை.

வழக்கமான சேமிப்பு கணக்குகள், நடப்பு கணக்குகள், பணக் கடன் கணக்குகள் மற்றும் மிகைப்பற்று கணக்குகள் இது தொடர்பான கட்டணங்கள் உயர்த்தப்படாத போதிலும், ஒரு மாதத்தில் செய்யக்கூடிய இலவச பண செலுத்துதல் மற்றும் திரும்பப் பெறுதல்களின் எண்ணிக்கை தொடர்பான சில மாறுதல்களை 2020 நவம்பர் 1 முதல் பேங்க் ஆஃப் பரோடா செய்தது. இவை ஒரு மாதத்துக்கு ஐந்து முறை என்பதில் இருந்து மூன்று முறையாக குறைக்கப்பட்டன. எனினும், இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகான பரிவர்த்தனைகளுக்கானக் கட்டணங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

கொரோனா காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள,  நிலைமையை கருத்தில் கொண்டு, மேற்கண்ட மாற்றங்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பேங்க் ஆஃப் பரோடா கூறியுள்ளது. மேலும், வேறெந்த பொதுத் துறை வங்கியும் இந்தக் கட்டணங்களை சமீபத்தில் உயர்த்தவில்லை.

கொரோனாவால் ஏற்பட்ட  நிலவரத்தைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் காலத்தில் வங்கிக் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் இதர பொதுத் துறை வங்கிகள் தெரிவித்துள்ளன.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags