சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு குறித்து அறிவிப்பு வெளியான பின்பே, தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு குறித்து அறிவிப்பிற்கு பிறகு தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும். சிபிஎஸ்இ தேர்வு குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்.
ஆன்லைன் வகுப்பு துவங்கும் முன்னர் பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக்கட்டணம் தொடர்பான நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்ட கமிட்டியை வலுப்படுத்த திட்டம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.